Analaitivu Divisional Hospital ( Handed over to RDHS)
Jaffna Regional Directorate of Health Services
அனலைதீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு கிரகப் பிரவேசம் (பால் காய்ச்சும் நிகழ்வு ) இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனலை மக்களின் மருத்துவ தேவைகளை இலகுவாக்கும் பொருட்டு அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அமைப்பினர் வடமாகாண சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய வெளிநோயாளர் பிரிவு ஒன்றினை புதிதாக நிர்மாணித்துள்ளனர்.
இக்கட்டிடத்தின் திறப்புவிழாவை எதிர்வரும் 2015 தை மாத நடுப்பகுதியில் செய்யும் பொருட்டு வைத்தியசாலை சமூகத்தினரிடம் கையளிப்பதற்காக இன்று 5.12.2014 பால் காய்ச்சும் நிகழ்வு இந்துசமய விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றுள்ளது. முன்னதாக விநாயக வழிபாடு, கிரகசாந்தி, மகாலக்சுமி பூஜை, என்பன இடம்பெற்று அனலைதீவு பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார்
திருக்கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மங்கல வாத்திய சகிதம் விநாயகர், மகாலட்சுமி, முருகப் பெருமான் திருவுருவப் படங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வைத்தியசாலைக் கட்டிடத்தில் விசேட வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் அவர்களும், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி அவர்களும், அனலை வைத்தியசாலை நிர்மான குழுவின் பிரதம திட்டப் பணிப்பாளால் திரு வே.நடேசன் அவர்களும்
கலந்துகொண்டனர். இவர்களுடன் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், அனலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி மற்றும் பணியாளர்கள், வைத்தியசாலை நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Read Moreஅனலைதீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு கிரகப் பிரவேசம் (பால் காய்ச்சும் நிகழ்வு ) இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனலை மக்களின் மருத்துவ தேவைகளை இலகுவாக்கும் பொருட்டு அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அமைப்பினர் வடமாகாண சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய வெளிநோயாளர் பிரிவு ஒன்றினை புதிதாக நிர்மாணித்துள்ளனர்.

- No Comments