Analaitivu Gowry Ambal Temple Feb 1, 2015
அனலைதீவு துறைமுகம் (கோட்டை மாதா) என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பாள் திருக்கோவில் ஜீா்னோத்தாரண நுாதன ஏக குண்ட பட்ஸ பிரதிஷ்ட மகாயாக கும்பாவிஷேகப் பெருஞ்சாந்தி விழா விஞ்ஞாபனம் நிகழ்வு ஸ்வஸ்தி மங்களகரமான ஜய வருஷம் உத்தராயணம் கோமந்தருது தைமாதம் 26ம் நாள் (09-02-2015) திங்கட்கிழமை பஞ்சமித்திதியும் அத்த நட்ஷத்திரமும் கூடிய 9.35 மணிமுதல் 10.10 மணிவரையுள்ள சுப முகூர்த்தத்தில் விநாயகப்பெருமான், அம்பாள், சிவகாமி சமேத நடராஜப்பெருமான், முருகப்பெருமான், இடபம், பலிபீடம், வைரவர் முதலான மூர்த்திகளுக்கு மகாகும்பாவிஷேகப் பெரு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதிஷ்டா பிரதம குரு சிவாகம ஜோதி சிவபுஜா நிதி சிவ ஸ்ரீ வை. தியாகராஜக் குருக்கள் (ஊரெழு) அவர்களது தலமையில் இடம் பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
Read Moreஇந்நிகழ்விற்கு பிரதிஷ்டா பிரதம குரு சிவாகம ஜோதி சிவபுஜா நிதி சிவ ஸ்ரீ வை. தியாகராஜக் குருக்கள் (ஊரெழு) அவர்களது தலமையில் இடம் பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
- No Comments